காரமடை அருகே ரயிலில் அடிபட்டு தனியார் ஊழியர் பலி

காரமடை, பிப்.26: காரமடை ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி காந்தன் (32) என்பதும், காரமடையில் தங்கி தனியார் ஆன்லைன் உணவு விநியோக ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

 

Related Stories: