பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை

கோவை, பிப்.27: கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் பொன்விழா நகரை சேர்ந்தவர் நந்தகோபால் (40). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியே சென்று விட்டார். அதன் பிறகு நந்தகோபாலின் மனைவி வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டிற்குள் இருந்த ஏராளமான சில்வர் பொருட்கள், வெள்ளி நகைகள், தங்கத்தட்டு மற்றும் 50,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து நந்தகோபால் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமாக கொள்ளையர்கள் யார்? என கண்டறிய போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

 

Related Stories: