போக்குவரத்து ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

 

ராமநாதபுரம், ஜூன் 26: அரசு போக்குவரத்து கழகத்தில், தனியார் மயம், ஒப்பந்த முறையை தடுக்கக் கோரியும் 24 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கான நிதியினை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரந்தர முறையில் நியமனம் செய்ய வேண்டும். தனியார் மயம், ஒப்பந்த முறையை தடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 100 மையங்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் நேற்று காலை 10 மணி வரை 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் புறநகர் கிளை முன்பும் நேற்று முன்தினம் காலை உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

மத்திய சங்க தலைவர் ராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன், சங்க மண்டல நிர்வாகிகள் பவுல்ராஜ், வெங்கடேசன், துணைப் பொதுச்செயலாளர் சமயதுரை, லோகநாதன், பொருளாளர் தியாகராசன், துணைத் தலைவர் பாஸ்கரன், கிளைச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் பேசினர். இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

The post போக்குவரத்து ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: