மணமேல்குடி தாலுகாவில் மரக்கன்று நடும் விழா

அறந்தாங்கி, ஜூன் 28: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவில் தாசில்தார் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்து அனைத்து ஊராட்சிகளிலும் மரகன்று நட அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசு ஊராட்சி பகுதியில் அதிக அளவில் மரக்கன்று நட அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து மணமேல்குடி தாலுகாவில் கானாடு ஊராட்சியில் சாலையோரத்தில் தாசில்தார் சேக் அப்துல்லா மரகன்று நட்டு வைத்தார். அப்போது, இந்த ஊராட்சியில் தான் முதன்முதலாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதை பின்பற்றி மணமேல்குடி தாலுகாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கணேசன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.

The post மணமேல்குடி தாலுகாவில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: