வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஜூன் 28: விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: டெல்டா மாவட்டங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதித்துள்ளதைப் போல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் பயிர்க் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் அனைத்து நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, அம்பலராஜ் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர் இந்திரஜித், தேசியக் குழு உறுப்பினர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர். செங்கோடன், துணைச் செயலர் தர்மராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: