நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கு சிறுகதை தொகுப்புகள் அனுப்பி வைக்கலாம்

நாகப்பட்டினம்,ஜூன்28: நாகப்பட்டினம் மாவட்ட புத்தத் திருவிழாவில் சிறுகதை எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்புகளை வரும் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் திருவிழாவாக ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுப்பாக வெளியிடப்படும். அனுப்பப்படுகின்ற சிறுகதைகள் அவற்றிற்குரிய உள்ளடக்கத்துடன் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் சிறுகதைகள் தொகுப்பாக புத்தகத் திருவிழா மேடையில் வெளியிடப்படும்.

nagaibookfair2024@gmail.com என்ற இணையதள முகவரியில் அனுப்ப வேண்டும். இதன்பின்னர் 9994479272, 9003757531 செல்போன் எண்ணில் அழைத்து உறுதிபடுத்தி கொள்ளவும். எழுத்தாளர் நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ஏற்கனவே இலக்கிய இதழ்களில் அல்லது சொந்தமாக தொகுப்பு வெளியிட்டு இருந்தால் அவைகளிலிருந்து தேர்வு செய்து அனுப்ப வேண்டும். தேர்வுகுழுவால் ஏற்று கொள்ளப்படும் சிறுகதை மட்டுமே தொகுப்பாக வெளிவரும்.எனவே விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கு சிறுகதை தொகுப்புகள் அனுப்பி வைக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: