ஒன்றிய அரசு பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சி

 

மதுரை, ஜூன் 26: தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரை மாவட்ட குழுவின் முயற்சியால் ஒன்றிய அரசின் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கடந்தாண்டு டிச.2 முதல் ஜூன் 22 வரை பயிற்சி வகுப்புகள் நடந்தது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 112 வகுப்புகள் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் சுமார் 324 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ரயில்வே துறை பணித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது.

The post ஒன்றிய அரசு பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: