கரந்தை சி.ஆர்.சி. டெப்போ எதிரில் சாய்ந்து நிற்கும் சிக்னல் விளக்கு கம்பம்

தஞ்சாவூர், ஜூன் 25: தஞ்சாவூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சீர்மிகு நகர திட்டம் என்ற அடிப்படையில் சாலை விரிவாக்கம் பணி, நிழற்குடைகள் அமைத்தல், போன்ற பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, மாரியம்மன் கோவில், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, புதிய பஸ் நிலையம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்பட்டு – வரும் பஸ்களில் கும்பகோ ணம், திருவையாறு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் அதிக அளவிலான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.

அவ்வாறு கும்பகோணம், திருவையாறு, பாபநாசம் போன்ற பகுதிகளில் இருந்து பழைய பஸ் நிலையம் வரும் வழித்தடத்தில் கரந்தை சி.ஆர்.சி. டெப்போ எதிரில் இரு சாலைகள் சந்திக்கும் பகுதியில் சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிக்னல் விளக்கின் கம்பி வளைந்து சிக்னல் விளக்கு சாய்ந்த நிலையில் காணப் படுவதால் வாகன ஓட்டிகள் திசை திரும்பும் வகையில் உள்ளது. இதனால் கார், வேன், மோட்டார் சைக்கிள் போன் றவைகளில் செல்வோர்கள் சாய்ந்த நிலையில் காணப் படும் சிக்னல் விளக்கால் அவ தியடைந்து செல்கின்றனர். இதனை சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் கவனித்து சாய்ந்த நிலையில் காணப் படும் சிக்னல் விளக்கை சரி செய்து மீண்டும் பயன்பாட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரந்தை சி.ஆர்.சி. டெப்போ எதிரில் சாய்ந்து நிற்கும் சிக்னல் விளக்கு கம்பம் appeared first on Dinakaran.

Related Stories: