அரிமளம் பேரூராட்சி பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

திருமயம்,ஜூன் 25: அரிமளம் பேரூராட்சி பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நோக்கில் முதற்கட்டமாக 55 மரக்கன்றுகள் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியை பசுமை நிறைந்த, சுகாதாரமான பேரூராட்சியாக மாற்றும் நோக்கில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் பேரூராட்சி பகுதி முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்து. முதற்கட்டமாக 55 மரக்கன்றுகள் நட முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று நடந்த விழாவில் அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணு முத்துக்குமார் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

மேலும் வரும் காலங்களில் அரிமளம் பேரூராட்சி முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர், உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனிடையே ஏற்கனவே அரிமளம் பசுமை மீட்பு குழு மூலம் அரிமளம் பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகம் மேலும் ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து இருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

The post அரிமளம் பேரூராட்சி பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: