பொன்னமராவதி அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு

பொன்னமராவதி,ஜூன் 25: பொன்னமராவதி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியால் மின்சாரம் தாக்கி பசு மாடு ஒன்று இறந்துள்ளது. பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது பசுமாடு அருகில் உள்ள சின்னையா என்பவது வயலில் மேச்சலுக்கு சென்றுள்ளது. அங்கே ஏற்கனவே அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் அந்த மாடு மிதித்துள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து பசுமாடு இறந்துள்ளது. மேயச் சென்ற மாடு திடீர் என விழுந்து கிடப்பதை பார்த்து பதறிச்சென்றவர்கள் மின்கம்பி அருந்து கிடந்தக் கண்டதால் மாட்டின் உரிமையாளர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு இறந்த சம்பவம் இப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பொன்னமராவதி அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடு சாவு appeared first on Dinakaran.

Related Stories: