பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தி்ல் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம்: 38 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பெரம்பலூர், ஜூன் 25:பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 416மனுக்கள்பெறப் பட்டது. மாவட்டக் கலெக்டர் கற்பகம் 38 மாற்றுத் திற னாளி பயனாளிகளுக்கு ரூ 6.27 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (24ம் தேதி) பொதுமக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டக் கலெக்டர் கற்ப கம் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மாற் றுத்திறனாளிகள் நலத்து றையின் சார்பில், 5 பயனா ளிகளுக்கு தலா ரூ1,200 மதிப்பீட்டில் நகரும் தள்ளு வண்டிகளும், 5 பயனாளி களுக்கு தலா ரூ3,000 மதிப் பீட்டில் மாற்றுத்திறனாளி கள் அமரும் இருக்கை (கார்னெர் சீட்), 1 பயனா ளிக்கு ரூ7,900 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும், 20 பயனாளிகளுக்கு தலா ரூ2,780 மதிப்பிலான காதொலி கருவியும், 2 பய னாளிகளுக்கு தலா ரூ9,050 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டியும், 5 பயனாளிக ளுக்கு தலா ரூ1,05,000 மதப்பீட்டில் மின்கலன் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் என மொத்தம் 38 மாற்றுத்திறனாளி பய னாளிகளுக்கு ரூ6,27,500 மதிப்பிலான உதவி உப கரணங்களை மாவட்டக் கலெக்டர் கற்பகம் வழங்கி னார்.

முதலமைச்சரின் தனிப் பிரிவு மனுக்கள், அமைச்சர் கள் கலந்து கொண்ட நிகழ் ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனு க்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட கலெக்டரின் மக் கள் தொடர்பு திட்ட முகாம் போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற் றப்படும் என்ற நம்பிக்கை யில் அரசு அலுவலர்களை தேடி மனுக்களை கொடுக் கும் பொதுமக்களின் நம் பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர் கள் பணியாற்ற வேண்டும் என்று மாவட்டக் கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடமிரந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை,தொழில்தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவ சாயக் கூலி உதவித் தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு த்தி 416 மனுக்கள் பெறப் பட்டது. இக்குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடி வேல்பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலு வலர் சுரேஷ்குமார், பெரம் பலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவிஇயக்குநர் வீரமலை, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கார்த்திக்கேயன், மாற்றுத் திறனாளிகள்நலஅலுவலர் பொம்மி உள்ளிட்ட அனை த்து துறைகளின் அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தி்ல் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம்: 38 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: