ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும்

வேதாரண்யம், ஜூன் 25: ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டுமென மத்திய அரசை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
வேதாரண்யம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் ஆண்டுப் பேரவை மற்றும் 41 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் ராஜகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவில், சங்கத்தின் மாநிலத் தலைவர் மாணிக்கம், துணைத் தலைவர் ராசகோபாலன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் குமரேசமூர்த்தி (பொ), சங்க இணைச் செயலாளர் செல்வராசு, நல்லாசிரியர் சித்திரவேலு, உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

விழாவில் பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் பாராட்டப்பட்டனர். மேலும், 70 வயதைக் கடந்த சங்க உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வருமான வரியில் இருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும், தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டது.

The post ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: