கூடாரத்தில் ஆட்டுக்குட்டிகளை அடைப்பதை தவிர்க்க வேண்டும்

 

சிவகங்கை, ஜூன் 25: இளம் ஆட்டுக்குட்டிகளை அதிகளவில் கூடாரங்களில்(கிடாப்)அடைத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு உள்ளதால் அவ்வாறு செய்யக்கூடாது என கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிவகங்கை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: இளம் ஆட்டுக்குட்டிகளை குறிப்பாக செம்மறி ஆட்டுக்குட்டிகளை பனை ஓலையால் வேய்ந்த கிடாப்பில் அடைப்பதை ஆடு வளர்ப்போர் செய்கின்றனர்.

இவ்வாறு செய்யும்போது சிலர் அதிகமான குட்டிகளை உள்ளே அடைத்து விடுகின்றனர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. மேலும் குட்டிகளை அடைத்து கிடாப்பின் மீது பாலித்தீன் தார்ப்பாய் போன்ற பொருட்களை போடுகின்றனர். இதனால் காற்று உள்ளே போக முடியாத நிலை ஏற்படுகிறது. இதனாலும் குட்டிகள் இறந்து விடுகின்றன. எனவே இவ்வாறு செய்யக் கூடாது. குட்டிகளை அடைப்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கூடாரத்தில் ஆட்டுக்குட்டிகளை அடைப்பதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: