பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு டெங்கு காய்ச்சல்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் , டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் கொசு உற்பத்தி அதிகரித்து அதன் மூலமாக காய்ச்சல் அதிக அளவில் பரவியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கடந்த 19ம் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி பரிந்துரையின் பேரில் அவருக்கு பரிசோதனை செய்த போது டெங்கு உறுதியானது. பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 550 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல், கொடுமையானது என்பதால் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு டெங்கு காய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: