திசையன்விளையில் குப்பைக்கு தீ வைத்ததில் பட்டாசுகள் வெடித்து சிறுவனின் கை விரல்கள் சேதம்

நெல்லை, ஜூன் 24: நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த விவசாயி சேகர் மகன் சாலமன்(12). வள்ளியூர் அருகேயுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டிலிருந்து தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் திசையன்விளை அருகே உபகாரமாதாபுரத்தில் வசிக்கும் பாட்டி சுப்பம்மாள் வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை 9.30 மணிக்கு சாலமன் அப்பகுதியிலுள்ள சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள குப்பைக்கு சிறுவர்கள் தீவைத்துள்ளனர். சாலமன் ஒரு குச்சியை வைத்து தீயை கிண்டிவிட்டபோது குப்பைக்குள் கிடந்த பட்டாசு வெடித்தது. இதில் சாலமனின் கை விரல்கள் சேதமானது. உடனே அங்கிருந்தவர்கள் சாலமனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷ்யாம்சுந்தர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் அங்குள்ள தேவாலயத்தில் கடந்த மே மாதம் நடந்த திருவிழாவில் பட்டாசு வெடிக்கப்பட்டது. இதில் வெடிக்காத பட்டாசுகள் அந்த குப்பையில் கிடந்துள்ளது. சிறுவர்கள் குப்பைக்கு தீ வைத்ததில் வெடிக்காத பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் சாலமனின் கை விரல்கள் சேதமானது என போலீசார் தெரிவித்தனர்.

The post திசையன்விளையில் குப்பைக்கு தீ வைத்ததில் பட்டாசுகள் வெடித்து சிறுவனின் கை விரல்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: