ஆனால் அந்த சான்றை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்க மறுத்துவிட்டது. இது ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறை என்று சாடியுள்ள அமைச்சர் வீணா ஜார்ஜ், தீக்காயம் அடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையும் இந்திய தூதரகம் அள்ளிக்கவில்லை என்று சாடி உள்ளார். மேலும் பேசிய வீணா ஜார்ஜ்,”குவைத்திற்கு தான் செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்காதது துரதிருஷ்டம். குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.தீ விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு உதவுவதற்காக குவைத் செல்ல இருந்த தனக்கு அனுமதி தரவில்லை,”இவ்வாறு தெரிவித்தார். இது போன்ற அனுமதி வழங்க ஒன்றிய அரசு மறுப்பது முதன்முறையல்ல. கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு வெளிநாட்டில் நிதி திரட்ட கேரள அமைச்சரவை குழு செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post குவைத்திற்கு தான் செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்காதது துரதிருஷ்டம் : கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் வேதனை!! appeared first on Dinakaran.