நியோமேக்ஸ் மோசடி ஏஜென்ட் கைது

மதுரை: மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம், ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீட்டாளர்களிடம் மோசடி செய்தது. இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன் உட்பட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவ்வழக்கு மதுரை மாவட்ட டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த தனுஷ் (29) என்பவரை பல மாதங்களாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவரை, நேற்று முன்தினம் கம்பத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவர், தேனி பகுதியில் ஏஜென்டாக செயல்பட்டு பல கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post நியோமேக்ஸ் மோசடி ஏஜென்ட் கைது appeared first on Dinakaran.

Related Stories: