மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பரிதாப பலி

மால்டா: மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள மாணிக்சக் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மின்னல் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

சாகாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 பேரும், கஜோல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேரும் பலியாகினர். ஹரிசந்திரப்பூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தம்பதி மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் இங்கிலீஷ் பஜார் பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

The post மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: