குளித்தலை நீதிமன்றத்தில் கணினி வாயிலாக வழக்கு பதிய பயிற்சி

 

குளித்தலை, மார்ச் 22: குளித்தலை நீதிமன்றத்தில் வக்கீல்கள், கணினி மூலம் ஏப்ரல் 1ம்தேதி முதல் வழக்கு பதிவு செய்வது குறித்த பயிற்சி நடந்தது. சென்னை உயர்நீதி நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றத்தில் பணிபுரியும் வக்கீல்கள், தங்களது வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது இனிவரும் காலங்களில் கணினி மூலமே தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் 1.4.2024 முதல் அனைத்து வழக்குகளும், பைலிங் முறையில் வழக்கு பதிவு செய்வது குறித்து நீதிமன்ற வக்கீல்கள், அலுவலக பணியாளர்களுக்கான கணினி மூலம் வழக்குகள் பதிவேற்றம் செய்வது குறித்தும். மேலும் தற்போது நடைமுறையில் இ.பைலிங் முறையில் புதிய மாற்றங்கள் குறித்த பயிற்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பயிற்சியை சார்பு நீதிபதி சண்முக கனி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி நித்தியா, கரூர் குற்றவியல் நீதிபதி அம்பிகா ஆகியோர் கணினி மூலம் வழக்குகள் பதிவேற்றம் குறித்து விளக்கம் அளித்து பயிற்சி அளித்தனர். இதில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நடுவர் பிரகதீஸ்வரன், வக்கீல் சங்க தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் நாகராஜன், மற்றும் வக்கீல்கள்,கலந்து கொண்டனர்.

The post குளித்தலை நீதிமன்றத்தில் கணினி வாயிலாக வழக்கு பதிய பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: