மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் ₹24.80 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள்

 

கரூர், ஏப். 21: கரூர் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் ரூ.24.80 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் தமிழக முழுதும் பல்வேறு உள்கட்ட அமைப்பு பணிகள் கூட்டிட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக கரூர் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சந்தான காளிபாளையம் பொதுமக்கள் நீண்ட நாளுக்காக மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கேட்டு வந்தனர்.

இதனடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கருணாநிதி 15வது நிதிக்குழு மானிய கோரிக்கை நிதியில் ரூ.24.80 லட்சம் நிதி ஒதுக்கி புதிய நீர்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆனது 4 மாதத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிகிறது. அதன் பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைக்கான பற்றாக்குறை இருக்காது.

 

The post மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் ₹24.80 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: