சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி தீர்த்தவாரி

கரூர், ஏப். 26: மேட்டு தெருவில் அமைந்துள்ள அபய பிரதான ரெங்கநாதர் கோயில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்14ம் தேதி தொடங்கி 15ல் கொடியேற்றம் நடைபெற்றது. 16ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சிம்ம, அனுமன், வெள்ளி கருட, ஐந்து தலை நாக வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. ரெங்கநாத சுவாமி யானை வாகனத்திலும், கல்யாண வெங்கடரமண சுவாமி கருட வாகனத்திலும் இரண்டு நாட்களுக்கு முன்தினம் எழுந்தருளினர்.திருக்கல்யாண உற்சவத்தையொட்டி ரெங்கநாத சுவாமி, சீதேவி, பூதேவி தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரெங்கநாத சுவாமி சார்பில் சீதேவி, பூதேவி தாயார்களுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை, அர்ச்சனை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 50 அடி உயரத்திலான தேர் மலர்களாலும் தோரணங்களாலும் மற்றும் புரோகியவர்கள் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் 24ம் தேதி அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தீர்த்தவாரியம் முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நேற்று இரவு ஆளும் பல்லாக்கு, இன்று ரெங்கநாத சுவாமியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கும் ஊஞ்சல் உற்சவம். திருவிழா நிறைவை முன்னிட்டு நாளை ரெங்கநாத சுவாமியுடன், கல்யாண வெங்கடரமண சுவாமிக்கும் வண்ணப்பூக்களால் வேள்வி நடைபெறுகிறது.

The post சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: