104 டிகிரியுடன் வாட்டி வதைக்கும் வெயில் கரூர் காந்தி கிராம பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்

கரூர், ஏப். 26: தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களில் விளையாடி பொழுதுபோக்குவதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பூங்காக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஊஞ்சல், பார்க், சறுக்கு விளையாட்டு, வட்ட வடிவிலான கம்பியில் சிறுவர்கள் வளைந்து நெளிந்து வருவதற்கு விதவிதமான அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் கரூர் காந்திகிராமம் பூங்காவில் அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் பூங்காவை பராமரிக்கும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காத காரணத்தாலும், வந்து விளையாடும் சிறுவர்களும், பெரியவர்களும் பொருட்களை தங்கள் பொருள் போல் பாதுகாக்காத காரணத்தாலும் அடிக்கடி உடைந்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடைந்துள்ள பூங்காவில் உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 104 டிகிரியுடன் வாட்டி வதைக்கும் வெயில் கரூர் காந்தி கிராம பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: