பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வெயில் தாக்கத்தால் பறவைகள், விலங்குகள் கடும் பாதிப்பு

 

கிருஷ்ணராயபுரம், ஏப். 21: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயில் கொடுமையால் மக்கள் கடும் அவதிக்க ஆளாகி வருகின்றனர். கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலர் நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பகல் பொழுதின் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். நாள்தோறும் காலை 11 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை மக்கள் சாலைகளில் நடமாட்டமே இல்லாமல் உள்ளது. வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் மற்றுமின்றி பறவைகள் மற்றும் விலங்குகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள மக்கள் நீர் சத்து நிறைந்த பழங்கள், இளநீர், ஜூஸ், கரும்பு சாறு, வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும் எனவும் இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.மேலும் தேவைக்கேற்ப அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என தெரிவிக்கின்றனர். வெயில் தாக்கத்தால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்களிலிருந்து காத்துக் கொள்ள மக்கள் தேவையில்லாமல் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.

 

The post பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வெயில் தாக்கத்தால் பறவைகள், விலங்குகள் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: