கட்டிமேடு அரசு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு பாராட்டு சான்றிதழ்

திருத்துறைப்பூண்டி, பிப். 21: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 470 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி மேலாண்மை குழு பள்ளியின் வளர்ச்சி, பள்ளி செல்லாமல் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் 2023_ 2024ம் கல்வியாண்டில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக செயல்பட்டமைக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேர்வு செய்து சனிக்கிழமை குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில் மாவட்ட அளவிலான நடந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாட்டில் பள்ளி மேலாண்மை குழு தலைவி தேன்மொழிக்கு மாவட்ட கலெக்டர் சாரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியங்கா, மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் பெர்னர்ஷ், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உடன் இருந்தனர்.

The post கட்டிமேடு அரசு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு பாராட்டு சான்றிதழ் appeared first on Dinakaran.

Related Stories: