மின் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டக் கூடாது: மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம், மே25:தமிழ்நாடு மின்சார வாரியசெயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டம் அரியலூர் கோட்டத்திற்குட்பட்ட பிரிவு அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்நடைகளை மின்கம்பம் மற்றும் இழுவை கம்பிகளில்கட்டுவதால் மின்விபத்து ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு பொதுமக்கள் கால்நடைகளை மின்கம்பம் மற்றும் இழுவை கம்பிகளில் கட்டக்கூடாது என எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் மின்கம்பங்களுக்கு கீழ் கால்நடைகளை கட்டக்கூடாது என எச்சரிக்கை செய்யப்படுகிறது இவ்வாறு அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர்அய்யனார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post மின் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டக் கூடாது: மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: