திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5.04 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: நாடு முழுவதும் கடந்த குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு ெதாடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் நேற்று சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். அதன்படி நேற்று 85,142 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

22,064 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.5.04 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 21 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5.04 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: