தமிழக அரசின் எண்ணற்ற தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

 

நாகப்பட்டினம்,டிச.31: தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம் நாகப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் அமுத விஜயரெங்கன் வரவேற்றார். முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் முரளி நிதி நிலை அறிக்கை வாசித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சிஆர்ஏ பரிந்துரையின் படி வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை விரைந்து அமல்படுத்த வேண்டும். துணை தாசில்தார் முதல் துணை ஆட்சியர் வரை பணியிறக்கம் செய்யப்பட்டதற்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும். கிராம உதவியாளர், அஞ்சல் உதவியாளர், பதிவுறு எழுத்தர், ஓட்டுநர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். காவல்துறையை போல் முதல்நிலை துறை பணியாளர்களுக்கு தனியாக மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

The post தமிழக அரசின் எண்ணற்ற தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: