முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்

 

கமுதி, டிச.30: கமுதி அரசு மருத்துவ மனையில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி விஜயா தலைமையில் நடைபெற்றது. கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவி தமிழ்ச்செல்வி போஸ், பேரூராட்சித் தலைவர் அப்துல் வஹாப் சஹாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் நரம்பியல், சிறுநீரக நோய்கள், மகப்பேறு மருத்துவம், கருப்பை வாய் பரிசோதனை, பேச்சுக் குறைபாடு, குடலிறக்கம், எலும்பு முறிவு, கருப்பை கட்டி, பல் சிகிச்சை உள்பட 20க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிறுநீரக சிகிச்சை, கண், காது, மூக்கு உள்ளிட்ட நோய்களுக்கு வெளியூரிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் குழந்தைகள் நல மருத்துவர் நல்லுச்சாமி, எலும்பியல் மருத்துவர் பிரபாகரன், காது, மூக்கு மருத்துவர் நாகரஞ்சித், டாக்டர் ரமேஷ்அரவிந்த், டாக்டர் சோமேஷ், பல்மருத்துவர் ராஜா உள்ளிட்டோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: