ஆசிரியருக்கு பள்ளி மேலாண்மை குழு பாராட்டு

தஞ்சாவூர், டிச.21: கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளி மேலாண்மை குழு பாராட்டு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொந்தியா குளத்தில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் பியூலாராணி பிரேம்குமார் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற கனவு ஆசிரியர் விருது விழாவில் கல்வித்துறை அமைச்சர் இடமிருந்து விருது பெற்றார். இதையடுத்து ஆசிரியர் பியூலாராணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வெற்றிசெல்வி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தலைமையாசிரியர் கோ.தில்லை கோவிந்தராஜன், பெற்றோர்கள் சத்தியா, வினோதிகா ஆகியோர் விருதுபெற்ற ஆசிரியை வாழ்த்தி பேசினர். நிகழ்வில் பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆசிரியருக்கு பள்ளி மேலாண்மை குழு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: