வடசங்கந்தி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் 77 பயனாளிகளுக்கு ரூ.21.16 லட்சம் நலத்திட்ட உதவி திருவாரூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த வடசங்கந்தி ஊராட்சியில் நேற்று 20.வடசங்கந்தி, 21.சங்கேந்தி, 22.பின்னத்தூர் ஆகிய கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதற்கு திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் சாரு, 77 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 16 ஆயிரத்து 249 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 2 லட்சத்து 25 ஆயிரம் மகளிர்கள் பயனடைந்து வருகின்றனர். மனு அளித்த 70சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை கிடைத்துள்ளது. மனு அளித்தும் உரிமைத்தொகை வராத மகளிர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

The post வடசங்கந்தி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் 77 பயனாளிகளுக்கு ரூ.21.16 லட்சம் நலத்திட்ட உதவி திருவாரூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: