புதுவையில் புத்தக பை இன்றி பள்ளிக்கு சென்ற மாணவர்கள்

புதுவையில் புத்தக பை இன்றி பள்ளிக்கு சென்ற மாணவர்கள்

புதுச்சேரி, ஆக. 1: புதுச்சேரியில் புத்தக பை இல்லா நாளையொட்டி அரசு பள்ளி மாணவ- மாணவிகள் புத்தக பை இல்லாமல் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் பல்வேறு போட்டிகளை நடத்தினர். பள்ளி புத்தகப் பை திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020ல் வெளியிட்டது. அதன்படி ஆண்டுக்கு குறைந்தது 10 நாட்களாவது பள்ளிகளுக்கு மாணவர்கள் புத்தக பை இன்றி வர வேண்டும். இந்த நாட்களில் கலை, வினாடி-வினா, விளையாட்டு, கைவினை பொருட்கள் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரியில் மாதத்தில் கடைசி வேலை நாளான நேற்று புத்தக பை இல்லாத நாள் கடைபிடிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் புத்தக பைகள் இல்லாமல் பள்ளிக்கு வந்தனர்.

இதேபோல் நிதியுதவி பள்ளிகளிலும், பெரும்பாலான சிபிஎஸ்சி தனியார் பள்ளிகளிலும் புத்தக பைகளின்றி மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வந்திருந்தனர். பள்ளியில் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பாட்டு பாடுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தனித்திறமைகள் ஊக்குவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அரசு பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர். மாணவர்களிடம் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது. முபாரக் 8408 புதுச்சேரியில் புத்தகப் பை இல்லா நாளையொட்டி என்கேசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் வண்ண கோலங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.

The post புதுவையில் புத்தக பை இன்றி பள்ளிக்கு சென்ற மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: