நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் கரை சரிந்து விழுந்தது

 

நீடாமங்கலம், ஜூலை 28: நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் கரை சரிந்து விழுந்தது. இதில் உடைப்பு ஏற்படுமோ என்று பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் அருகில் உள்ள ஒரத்தூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து சிறிது தூரத்தில் கோரையாற்றுக்கரை மழையில் சரிந்து சாலையின் கால் பகுதி ஆற்றில் விழுந்துள்ளது. சாலையின் நடுவில் சரிந்து விழும் நிலையில் வெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்த சாலை கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு) செல்லும் முக்கியமான சாலையாக உள்ளது. இங்கு விவசாயிகள் நெல், பருத்தி, கத்தரி, வெண்டை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பல சாகுபடிகளும், செங்கல் காலவைகளும் உள்ளன. இந்த சாலையில் ஆபத்தான நிலையில் உள்ளதால், டிராக்டர் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அதிக மழை பெய்தால் மேலும் சாலை ஆற்றில் சரிந்து உடைப்பு ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, தற்சமயம் மரங்களை வைத்து தடுப்பு அமைத்து, சாக்கு மூட்டைகளை அடுக்கி சாலையை பாது காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் கரை சரிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Related Stories: