திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு பள்ளியில் சதுரங்க போட்டி

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 26: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் நேதாஜி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்து பேசுகையில், முதலில் சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்தது இந்தியர்களே என்றார். மேலும் சதுரங்கம் விளையாடிப் பழகும் மாணவ, மாணவிகளுக்கு கூர்மையான கவனம் வெற்றி மற்றும் தோல்வியை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை கிடைக்கும் என்று குறிப்பிட்டார். சதுரங்க போட்டியை கல்வி புரவலர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு இந்த விளையாட்டின் வாயிலாக தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும், நினைவாற்றல் அதிகரிக்க உதவி புரியும். மேலும் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு காய் நகர்த்தலும் மிகவும் முக்கியமானது அதுபோல் தான் நம் வாழ்க்கையும் என்று குறிப்பிட்டார். ஒரு செயலை செய்வதற்கு முன் இரு முறை அல்ல பலமுறை யோசிக்கும் தன்மை சதுரங்க விளையாட்டின் மூலமாக கிடைக்கும் என்றார். முடிவில் ஆசிரியர் ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியர் தினேஷ் செய்திருந்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு பள்ளியில் சதுரங்க போட்டி appeared first on Dinakaran.

Related Stories: