கீழநத்தத்தில் புதிய சாலைகள்

கேடிசி நகர், ஜூலை 8: கீழநத்தம் பஞ்சாயத்திற்குட்பட்ட கீழூர் தங்கம்மன் கோயில் தெருவில், பஞ். பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் சிமென்ட் சாலை பணி, பிள்ளையார் கோயில் தெருவில் 15வது மானிய நிதி குழு 2022-23ம் ஆண்டின் வரையறுக்கப்படாத நிதி ரூ.5 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை பணிகள் நடைபெற்றது. இப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா நடைபெற்றது. பஞ். தலைவர் அனுராதா ரவிமுருகன் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு சாலைகளை திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர் ராஜாமணி, பஞ். செயலர் சுபாஷ், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ராமச்சந்திரன், தண்டபாணி குமரன், பாளை. மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன், ஆதிராவிட நல அணி அமைப்பாளர் செல்லப்பா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி நெல்சன் பாண்டியன், அரசு ஒப்பந்ததாரர்கள் முத்துக்குட்டி, ரெட்டியார்பட்டி ராமசாமி, தெய்வநாயகம், இசக்கி, சங்கரபாண்டி, முத்துராமலிங்கம், ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கீழநத்தத்தில் புதிய சாலைகள் appeared first on Dinakaran.

Related Stories: