கோட்சேவை புகழ்ந்து பேசிய ஒன்றிய பாஜ அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பாஜ அமைச்சர் கிரிராஜ் சிங், பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது,நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசியுள்ளார்.பாஜ ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்கு உரியது. மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

The post கோட்சேவை புகழ்ந்து பேசிய ஒன்றிய பாஜ அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: