சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்கும் ஜே.சி.டி.பிரபாகர் மகளுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜூன் 10ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை ‘தமிழ்நாடு அரசியலில் மகளிரின் பங்கேற்பு’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள சர்வதேச பார்வையாளர் தலைமை பண்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகருக்கு எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று தமிழ்நாட்டில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரிகளுக்கும் எனது பாராட்டுகள்.

டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகரின் தந்தையார் ஜே.சி.டி.பிரபாகர் ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டு, சட்டமன்ற உறுப்பினராகவும், வாரிய தலைவராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். அவரது அமெரிக்க பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்கும் ஜே.சி.டி.பிரபாகர் மகளுக்கு ஓபிஎஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: