தொட்டபெட்டாவில் ஆளுநர் ரவி இயற்கை அழகை கண்டு ரசித்தார்

ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 6 நாள் பயணமாக கடந்த 3ம் தேதி ஊட்டி வந்தார். அங்குள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றினார். நேற்று பிற்பகல் ராஜ்பவன் மாளிகையில் இருந்து புறப்பட்டு தொட்டபெட்டா சென்றார். அங்கிருந்து டெலஸ்கோப் மூலம் இயற்கை அழகை ரசித்தார். சுமார் 30 நிமிடம் அங்கிருந்துவிட்டு ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு திரும்பினார். இதையொட்டி ஊட்டி-கோத்தகிரி சாலையில் சேரிங்கிராஸ் முதல் தொட்டபெட்டா வரையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

The post தொட்டபெட்டாவில் ஆளுநர் ரவி இயற்கை அழகை கண்டு ரசித்தார் appeared first on Dinakaran.

Related Stories: