ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தினவிழா

ஒட்டன்சத்திரம், ஏப். 13: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை மற்றும் கீரனூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை செவிலியர் கல்லூரி இணைந்து, 75-வது உலக சுகாதார தின பரிசளிப்பு விழா கண்காணிப்பாளர் அனீஸ்தாமஸ் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளை தலைவர் கருப்பணன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்புரையாற்றினார். சக்தி குழுமம் தலைவர் டாக்டர்.வேம்பணன், ஐ.எம்.ஏ துணைத் தலைவர் முத்துச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு, மாநில, மத்திய செயற்குழு உறுப்பினர் டாக்டர் சதீஸ்குமார், ரெட் கிராஸ் செயற்குழு உறுப்பினர் ஹரால்டுஜாக்சன் வாழ்த்துரை வழங்கினார். மருத்துவ இணை இயக்குனர் பூமிநாதன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், துணை இயக்குனர் சுகாதார பணிகள் பழனி டாக்டர் அனிதா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். செவிலியர் கல்லூரி முதல்வர் விக்டோரியாள்செல்வக்குமாரி நன்றி கூறினார்.

The post ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: