பாமகவினர் ஆர்ப்பாட்டம்

சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியில் தனியார் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் திலகபாமா முன்னிலை வகித்து பேசினார். ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜே.கே.செல்வன், தெற்கு மாநகர செயலாளர் வைரவேல், வடக்கு மாநகர செயலாளர் கணேஷ்பிரபு, இளைஞரணி செயலாளர் செல்வக்குமார், மாநகர இளம் பெண் செயலாளர் சாந்தாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டணர்.

Related Stories: