வியாசா கல்லூரியில் உலக வன நாள் விழா

புளியங்குடி,மார்ச் 23: புளியங்குடி அருகே உள்ள வியாச கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக வன நாள் விழா நடந்தது. விழாவிற்கு உதவி வன பாதுகாவலர் மணிகண்ட பிரபு தலைமை வகித்தார். கல்லூரி சேர்மன் வெள்ளத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றார். சங்கரன்கோவில் வனசரக அலுவலர் ஸ்டாலின் உலக வன நாள் கொண்டாடுவதின் நோக்கத்தையும் வன விலங்குகளை பாதுகாப்பது பற்றிய அவசியத்தையும் விரிவாக எடுத்து கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் வன விழாவை யொட்டி நடைபெற்ற கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, வினாடி வினா, ஓவிய போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். விழாவில் புளியங்குடி நீயூ மதினா இப்ராகிம், தேரிகுமார், சேக் உசேன் மற்றும் வன காப்பாளர்கள், வனசரகர்கள் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் சரக வனக்காப்பாளர் அனிதா நன்றி கூறினார்.

Related Stories: