வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை நாராயண பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி

வேதாரண்யம், ஜன.24: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் அமைந்துள்ள வேதநாராயண பெருமாள் என்றழைக்கப்படும் அபிஷ்ட வரதராஜர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 3ம்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் பத்து நாட்கள் பகல் பத்து உற்சவம் முடிந்து கடந்த, 11ம் தேதிவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

நிகழ்ச்சியில் முக்கிய திருவிழாவான கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள்ளேயே மேளதாளத்துடன் பெருமாள் புறப்பாடு நடைபெற்று கொடி மரத்தடியில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உபயதாரர்கள் உள்பட குறைந்த அளவு பக்தர்களே முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பெருமாளை வழிபட்டனர்.

Related Stories: