டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மாநாடு

கடலூர், ஜன. 6: கடலூரில், தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜன், விஸ்வநாதன், ராஜா, பூமிநாதன், ஞானபிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சதீஷ் வரவேற்றார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, விடுதலை சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைசெல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இடைநிறுத்தமின்றி ஆண்டு முழுவதும் தொடர் பணி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையால் உள்ளாட்சித் துறைகள் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும்  பொது ஊராட்சி ஒன்றியங்களில் பருவகாலப் பணியாளர்களாக கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகள் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை கிடைப்பதில்லை. எங்களது நிலை உணர்ந்து, ஆண்டு முழுவதும் தொடர் பணி வழங்க வேண்டும். ஒரே மாதிரியான பணியை செய்யும் எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: