புவனகிரி, மார்ச் 20: சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை குழுவினர், அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிதம்பரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 52,010 வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை கைப்பற்றிய பறக்கும் படையினர், அதை சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
