கடலூர், மார்ச் 18: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நரிக்குறவர்கள் உள்ளிட்டோர், லைசென்ஸ் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட எஸ்பி.ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 247 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் இருக்கும் நிலையில், 175 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கி பாதுகாப்பு பணிக்கு 71 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு துப்பாக்கி (வழக்கு சொத்து) நீதிமன்றத்தில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து துப்பாக்கிகளும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
