அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆர்.ஜே.டி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலின் நிர்வாக பொறுப்புகளை ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளை கவனித்து வருகிறது. இக்கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில் சுமார் ரூ.200 கோடி அதிகமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சமீபத்தில் புகார் எழுந்து இருந்தது. இதைத்தொடர்ந்து அதுகுறித்து விசாரிக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே.டி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,‘‘அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும் இதுகுறித்த விசாரணையை மேற்பார்வையிட நீதித்துறை பணியாளர்களை கொண்ட ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்க வேண்டும். குறிப்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று முடிவடையும் வரை ஆதாரங்களை அளிக்கவோ அல்லது தடுக்கவோ முடியாத வகையில் கணக்கு புத்தகம், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், ஆன்லைன் பரிவர்த்தனை விரவரங்கள், சிசிடிவி காட்சிகள், மின்னஞ்சல் பதிவுகள் மற்றும் டேட்டா சேகரிக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதில் இதே கோரிக்கை கொண்டு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: