அமர்நாத் யாத்திரைக்கு 3வது குழு புறப்பட்டது

ஜம்மு: இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நேற்று முன்தினம் தொடங்கியது. பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தின் வழியாக 57 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையின் முதல் நாளிலேயே 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று 4812 பேர் கொண்ட மூன்றாவது குழு புறப்பட்டுச்சென்றனர்.

Related Stories: