நாட்டின் முதல் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் வளாகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

ஜோத்பூர்: ராஜஸ்தானின் நாட்டின் முதல் கிரீன்பில்ட் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஹரிபாவ் பாகடே, ஒன்றிய அமைச்சரும் ஜோத்பூர் எம்பியுமான கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடி புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.28,840கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம், விமானப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. புதிய முனைய கட்டிடம் மொத்தம் ரூ.480கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 23000சதுரமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இது ஆண்டுக்கு 20லட்சம் பயணிகள் வரை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் அரச பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முனையம், வளைவுகள் மற்றும் பாரம்பரிய சாளரங்கள் போன்ற அம்சங்களை நவீன வடிவமைப்போது இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பலோத்ரா மாவட்டத்தில் பச்பத்ராவில் நாட்டின் முதல் கிரீன்பில்ட் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,\\” அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவில்லை. ஐரோப்பாவின் சுத்திகரிப்பு திறன் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியா இப்போது சுத்திகரிப்பு திறனில் உலகின் நான்காவது பெரிய நாடாக மாறியுள்ளது.
மேலும் இந்த திறன் தொடர்ந்து வளரும். பல நாடுகளில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் 40 முதல்50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும் எரிபொருள் ஒதுக்கீட்டு முறையின் மூலம் விநியோகிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் ஒரு நாள் கூட அத்தகைய நிலை ஏற்படவில்லை. வதந்திகள் பரப்பப்பட்டன. மக்கள்அச்சமடைய செய்யப்பட்டனர். அரசியல் விளையாட்டுகள் ஆடப்பட்டன. ஆனால் தவறான நோக்கங்களை கொண்டவர்கள் வெற்றிபெறவில்லை” என்றார்.

Related Stories: