மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த பாஜ எம்எல்ஏவின் இறுதி சடங்கில் முதல்வருக்கு எதிர்ப்பு

சுராசந்த்பூர்: மணிப்பூர் மாநிலத்தில்,கடந்த 2023ல் குக்கி பழங்குடிகள் மற்றும் மெய்டீஸ் இன மக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கலவரத்தின் போது பாஜ எம்எல்ஏ வுங்சாகின் வால்டே மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். 2 ஆண்டுகள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மீண்டும் கடந்த பிப்ரவரியில் அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

சுராசந்த்பூர் மாவட்டத்தில் நேற்று வால்டேவுக்கு இறுதி சடங்குகள் நடந்தது. இதில், பங்கேற்க பாஜ முதல்வர் கேம்சந்த்சிங் சுராசந்த்பூர் வந்தார். வால்டேவின் இல்லத்தில் நடந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குகி, ஸோ அமைப்புகள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதையொட்டி சுராசந்த்பூரில் கடைகள் அடைக்கப்பட்டன.வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.

Related Stories: