ராமர் கோயில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க கெஜ்ரிவால் பிரார்த்தனை

பனாஜி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் கோயிலில் பிரார்த்தனை செய்தார். முன்னாள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மூன்று நாள் பயணமாக கோவாவுக்கு வந்தார். கோவா மாநிலம் பனாஜியில் உள்ள மாருதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், அயோத்தி ராமர் கோயிலில் நடந்ததாகக் கூறப்படும் நன்கொடை பணம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம். குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பவர்கள் அல்லது ஆதரிப்பவர்களும் விசாரிக்கப்பட்டு தண்டிக்க வேண்டும்.

நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கோவிலுக்கு நன்கொடைகளை வழங்கியதாகவும், நன்கொடைகளைக் கையாள்வதில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

Related Stories: