பட்டு வேட்டி, சட்டையில் தலைமை செயலகம் வந்த முதல்வர் விஜய்

சென்னை: முதல்வர் விஜய் நேற்று பட்டு வேட்டி, சட்டையில் தலைமை செயலகம் வந்தார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதில் இருந்து தினசரி கோட்-சூட் அணிந்து தலைமை செயலகம் வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று முதல்வர் விஜய் தலைமை செயலகம் வந்தபோது பட்டு வேட்டி, சட்டையுடன் வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரான ஜெகதீசன் தவெக கட்சியில் முக்கிய ஆலோசகராகவும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். தவெகவின் தொடக்க காலம் முதலே விஜய்யின் அரசியல் மற்றும் நிர்வாக பணிகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வருகிறார்.

அதன்படி, நேற்று காலை தனது மேலாளரும் ஆலோசகருமான ஜெகதீசன் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய் பட்டு வேட்டி, சட்டை அணிந்து சென்றிருந்தார். அப்படியே அங்கிருந்து தலைமை செயலகம் வந்ததால், விஜய் அதே உடையுடன் இருந்ததாக கூறப்பட்டது.

Related Stories: